சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர்.
அறிவாலயத்தில் மூன்றாவது நாளாக, மக்களவைத் தேர்தல் தொடர்பாக, திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகிய ஐவர் கொண்ட திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக, இன்று நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.