இசையால் உலகத்தையே கட்டிப்போட்ட இசைஞானியின் மகள் மறைவிற்கு திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் என பலர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

பூங்கோதை ஆலடி அருணா

இளையராஜாவுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களது குடும்பமே இசை குடும்பம். பவதாரணியும் பின்னணி பாடகிதான். ஒளியிலே பாடலை அவர் பாடிய விதம் அனைவரையும் ஈர்த்தது.

அது போல் மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலும் மயங்க வைத்தன. 47 வயதாகும் பவதாரணிக்கு கடந்த 5 மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை 5.20 மணிக்கு இலங்கையில் சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். அவருடைய உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்.. மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்’’ என பதிவு செய்துள்ளார்.

பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களிலும், மக்கள் பணிகளிலும் ஆக்டிவாக இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது இரங்கல் பதிவில்,

‘‘தந்தையின் தாய்மையை மகள்களால் மட்டுமே உணர முடியும்…

தாயின் வடிவில் மாண்ட மகளை காணும் தந்தைக்கு யார் ஆறுதல் கூறுவார்’’ என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal