பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை
செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இந்நிலையில் இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்து 6 நாட்களாகி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோர முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal