பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையேற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 33.51 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி முதலீடு பெறப்பட்டது. 2022-ல் கர்நாடகா 9 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது. குஜராத்தில் முதலீட்டாளர் மாநாடு தொடங்குவதற்குள் ரூ. 7 லட்சம் கோடி
ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. தமிழகம் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலாவது முதலீடுகளை ஈர்த்திருக்க வேண்டும். ஆனால் ரூ.6.6 லட்சம் கோடி மட்டுமே வந்துள்ளது.
தமிழக அரசு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும். அதானியை விமர்சனம் செய்த தி.மு.க.வினர் தற்போது பாராட்டுகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.