ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை அடுத்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.