தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் நேற்று நடைபெற்றது. மருத்துவ சிகிச்சைக்கு பின் முதன்முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டார்.

பிரேமலதா விஜயகாந்த் தே.மு.தி.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களை வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal