திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முசிறி & மேட்டுப்பாளையம் சாலையில் மிக பிரம்மாண்டமாக அ.தி.மு.க மாநாட்டைப் போல் நாளை நடக்க இருக்கிறது.
இந்த திருமணவரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இது பற்றி துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.
‘‘சார், உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜைப் பொறுத்தளவில் சாதி & மதத்தைக் கடந்து அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடக்க இருக்கிறது.
அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலும், சாதாரண ஒன்றியச் செயலாளராக தான் இருக்கும் நிலையிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கௌரவிக்கும் வகையில் மாநாட்டைப் போல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு, அதற்கான பணிகள் தற்போது முடிந்திருக்கிறது.
மழை வெள்ளப் நிவாரணப் பணிகளில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜ் இல்ல நிகழ்வில் ஏற்கனவே பங்கேற்க தேதி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சந்திக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரு ஒன்றியச் செயலாளர் திருமணவரவேற்பு நிகழ்வை அ.தி.மு.க. மாநாட்டைப் போல் நடத்துவதுதான், தி.மு.க.வினரையே வியக்க வைத்திருக்கிறது. காரணம் அங்குள்ள தி.மு.க. நிர்வாகி தனது கட்சிப் பதவியை மறந்து விட்டு, காண்டிராக்ட் காரர்களில் வயிற்றில் அடித்து விட்டு, அனைத்துப் பணிகளையும் அவரே பினாமி பெயரில் எடுத்து செய்து வருகிறார். இதற்கு அவரது சொந்த இடத்தில் மலைபோல் குவித்து வைத்திருக்கும் ஜல்லிக் கற்களே சாட்சி’’ என்று தி.மு.க.வையும் ஒரு பிடி பிடித்தனர்.
எம்.ஜி.ஆர். இருக்கும்போது, ‘உப்பிலியபுரத்தை உப்பில்லாத ஊர்’ என்று கலைஞர் விமர்சனம் செய்தார். காரணம், உப்பிலியபுரம் அ.தி.மு.க.வின் கோட்டையாக அப்போது இருந்தது. அந்தக் கோட்டையை எடப்பாடியார் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் உப்பிலியபுரம் ஒன்றிய ரத்தத்தின் ரத்தங்களின் கோரிக்கையாக இருக்கிறது.