இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை வாரி வழங்கி, அவர்களை அகமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. சுற்றுச் சுழல் அணி சார்பில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி மகிழ்வித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!
இது பற்றி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த உடன் பிறப்புக்களிடம் பேசினோம்.
‘‘சார், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கடையம் வடக்கு ஒன்றிய பகுதியில் தி.மு.க. சுற்றுச் சூழல் அணி சார்பில் நடைபெற்றது. ஆலங்குளம், கடையம், பாப்பாகுடி, கீழப்காவூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள சுமார் 450க்கும் மேற்பட்ட அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களையும், கல்வி உபகரணங்களையும் வழங்கினார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வழங்கினார்.
மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள் வழங்கியதோடு, மரக்கன்றுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கடையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மகேஷ் மாயவன், ஐந்தாங்கட்டனை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் யா.சுதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் கிளைச் செயலாளர் சக்திவேல் உள்பட ஏராளமான உடன் பிறப்புக்கள் கலந்துகொண்டனர்.
தென்மாவட்ட தி.மு.க.வில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடி அக்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா போன்ற ஒரு சிலரால்தான் கட்சிக்கு நற்பெயர் ஏற்படுகிறது!