தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக
உள்ளதாகவும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal