சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரசார ஊர்வலம் நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த பிரசார ஊர்வலத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்று, ஊர்வலத்தில் கலந்து கொண்டு வி.சி. மோட்டூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன். எம்.எல்.ஏ., மாவட்ட
சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன், துணை அமைப்பாளர் சிவா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வினோத், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்பட தி.மு.க. வின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal