மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து
நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் சங்கரய்யாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தியவாறும், மாணவ, மாணவிகள், பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக அனைத்து கட்சியினர் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பின்னர் நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட சங்கரய்யாவின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் ஜானகிராமன், தி.மு.க. செல்வராஜ், ஜெயபிரகாஷ், தே.மு.தி.க. நாராயணசாமி, மகாலிங்கம், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, தி.க. சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கணேஷ்குமார், வக்கீல் கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal