மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டிருக்கிற தெய்வீக திருமகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது  வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும் அவரை வரவேற்ற காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமிகள் சிலர், தெய்வீக திருமகனார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயற்சி  செய்தனர். அந்த சுயநலவாதிகளிடம் இருந்து, அவர் ஒரு சுதந்திர போராட்டத் தலைவர், தேசிய தலைவர், சர்வ சமய, சர்வ ஜாதி என அனைத்து பிரிவிற்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்துக் காட்டுகின்ற வகையில், அந்த புண்ணிய பூமியில் அஞ்சாத மன உறுதியோடு, உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன் என தேவருக்கு மரியாதை செலுத்தினார், எடப்பாடி பழனிசாமி.  மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு 80 கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்ற பாதையில் பொதுமக்கள் எல்லாம் அவரை வரவேற்றதை திட்டமிட்டு மறைத்து விட்டு, சில கயவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாங்கிய கூலிக்கு கூவியர்கள் இதில் தோல்வியடைந்து விட்டார்கள். தேவர் சில பேருக்கு மட்டுமே சொந்தம் என்று குறுகிய வட்டத்தில், அவரது புகழை ஒரு கூண்டுக்குள்ளே அடக்க
நினைக்கிறார்கள், அதையெல்லாம் தகர்த்து எறிந்து அவரின் புகழ், தியாக வரலாறு, சர்வ மதம் சர்வ ஜாதிகளுக்கும் பாடு பட்டவர் என்பதை இன்றைக்கு மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் பூமிக்கு வருகை தந்து வெற்றி கொடி பறக்க விட்டு, தேவரின் புகழை எட்டுதிக்கும் எடுத்துச் சென்று இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள் ளார். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal