எடப்பாடி பழனிசாமியை யார் முதல்வராக்கியது என்பது எல்லோருக்கும் தெரியும்! அப்படி முதல்வராக்கியவருக்கே துரோகம் செய்து நெருப்போடு விளையாடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என ஓ-. பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்,

‘‘முதலமைச்சராக இருந்த போது கூட பசும்பொன்னுக்கு வராமல் புறக்கணித்தவர் இப்போது தனது அரசியல் அபகரிப்பை குறிப்பாக முக்குலத்தோர் மீதான வன்மத்தை நியாயப்படுத்தவும் திருமதி சசிகலா ஓ.பி.எஸ் ஆகியோரை துரோகத்தால் வீழ்த்தியதை கொண்டாடவும் பசும்பொன் திருத்தலத்தை எடப்பாடி ஆட்படுத்துவது நெருப்போடு விளையாடும் காரியமாகும்.’’ என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் தேவர் குருபூஜைக்கு சென்று வருவது வரை தமிழக காவல்துறைதான் ‘திக் திக்’ என்று இருக்க வேண்டும் போல..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal