சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் செந்தில்குமார், அருள்முருகன் பதவியேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 63 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இருவரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர். வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பதவிப்பிராமணம் செய்து வைத்தார். கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற 2 பேரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவர்கள். இதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது. இன்னும் 10 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal