தமிழக காவல்துறையில் அதிரடிப் படையிலும், அதிவீரப்படையிலும் பணியாற்றியவர் கராத்தே வீரர் எம்.தனசேகரன். இவர் காராத்தே மீதுள்ள பற்றால், ஸ்பெஷல் உதவி ஆய்வாளராக காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது விருப்ப ஓய்வு பெற்று, கராத்தே பயிற்சியளித்து வருகிறார். இவர் கராத்தேவில் பல்வேறு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார்.

எம்.தனசேகரன்

இந்த நிலையில்தான் கராத்தே கலையில் உள்ள இடர்பாடுகளையும், இன்னல்களையும் நீக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

‘‘தமிழனின் வீரக்கலை கராத்தே கலையில் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் இரத்தம் சிந்தி வீரக் கலையை பயின்று வருகின்றனர் தமிழனின் பாரம்பரிய கலை கராத்தே விளையாட்டுக்கு இன்றைக்கு முறையான அங்கீகாரம் இல்லை ஆனால் அங்கீகாரம் பெற்ற ஒரே விளையாட்டு SGFI பள்ளி கல்வி துறையால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒரே விளையாட்டு.

பள்ளி கல்வித் துறையால் கடந்த 29.09.2023 முதல் 01.10.2023 வரை மூன்று நாட்கள் கோவை மாவட்டத்தில் ஷிநிதிமி மாநில கராத்தே தேர்வு நடை பெற்றது பள்ளி கல்வி துறை உடற் கல்வி ஆய்வாளர் குமரேசன் அவர்கள் தலைமையில் இந்த கராத்தே போட்டிகள் நடை பெற்றது SGFI மாநில கராத்தே போட்டியில் வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் KUMITE சண்டை பிரிவில் அவர்களுக்கு இரண்டு நிமிடம் விளையாடுவதற்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் உடற்கல்வி ஆய்வாளர் அவர்கள் வெறும் 45 நொடிகள் மட்டுமே வழங்கி உள்ளார்கள் இதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது

SGFI கராத்தே போட்டிகளை காண்பதற்கு வந்து இருந்த வீரர்களின் பெற்றோர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் அனுமதி வழங்கவில்லை. கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் (COACH) பயிற்சியாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் கராத்தே வீர்கள் விளையாடும் நிகழ்வுகள் க்ஷிமிஞிமிளி காணொளி எடுப்பதற்கும் அனுமதி வழங்கவில்லை.

SGFI கராத்தே போட்டிகளை அங்கீகாரம் இல்லாத (WKF) நடுவர்களிடம் தன்னிச்சையாக உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் அவர்கள் வழங்கியது முறையற்ற செயலாகும். (WKF) நடுவர்கள் திறமையான வீரர்களை தேர்வு செய்யவில்லை அவர்களுடைய மாணவ மாணவிகள் மட்டுமே பெரும் அளவில் தேர்வு செய்துள்ளனர்.

SGFI மாநில கராத்தே தேர்வு ஒரு தலை பட்சமாக நடை பெற்றது பள்ளி மாணவர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது எந்த தகுதியும் இல்லாத உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் அவர்கள் செய்த செயலால் இன்றைக்கு திறமையான வீரர் வீராங்கனைகள் அனைவரும் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் SGFI கராத்தே போட்டியில் நடை பெற்ற முறை கேடுகளை உடனடியாக விசாரணை நடத்தி மாணவ செல்வங்களை காப்பாற்ற வேண்டுமாய் இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, உலக கராத்தே வீரர் தமிழன் தனசேகரன்’’ என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

கராத்தே வீரர்களின் துயரத்தை துடைக்க முன்வருவாரா மு.க.ஸ்டாலின்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal