தான் ஒரு ‘பிக்பாஸ்’ என்பதால் தொகுதியும் இரண்டு வேண்டும் என்று எதிர் பார்க்கிறார். ஆனால் ஒன்று தான் என்று தி.மு.க. தலைமை உறுதியாக கூறி விட்டதாக கூறப்படுகிறது. அப்படியானால் கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் ஒன்று முக்கியமாக வேண்டும் என்று கமல்ஹாசன் கருதுகிறார். ஆனால் கோவையில் கமலுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் எனவே கோவை தொகுதியிலேயே போட்டியிடலாம் என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து இருக்கிறார்கள். கோவையை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகம். அதேபோல் அ.தி.மு.க.வுக்கும் ஆதரவு இருக்கிறது. எனவே விருமாண்டி விரும்பினால் அந்த தொகுதியை கொடுத்து விடலாம் என்று தி.மு.க.வும் கருதுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal