திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்த ராஜ்மோகன் குமார் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் திமுக முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்த ராஜ்மோகன் குமார் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருப்பூர் வடக்கு மாவட்டம், திருப்பூரைச் சேர்ந்த கே.ராஜ்மோகன்குமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இயக்குநர் சற்குணத்தின் களவாணி-2 படத்தில் கதாநாயகி ஓவியாவுக்கு அப்பாவாக ராஜ்மோகன் குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.