காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்ததற்கு, ஆளும் பா.ஜ.க. அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில்தான் இந்தியாவின் பெயர் ‘பாரத்’ ஆக குடியரசுத் தலைவர் மாளிகையே மாற்றம் செய்திருக்கிறது.

வருகிற 9ம் தேதி ஜி20 உச்சி மாநாடு விருந்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அழைப்பிதழில், ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பாரத குடியரசு தலைவர்’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என சில அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தன. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் விருப்பமும் இதுதான். அடிக்கடி ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்ற வார்த்தையையும் பா.ஜ.க. தலைவர்கள் பயன்படுத்துவார்கள். இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் ‘பாரத குடியரசு தலைவர்’ என அச்சிடப்பட்டிருக்கிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், வருகின்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ‘பெயர் மாற்றம்’ மசோதா நிறைவேறும் என்கிறார்கள்.

ஏற்கனவே, எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal