மதுரை மாநாட்டு வெற்றி, கோர்ட்டில் கிடைத்த வெற்றியால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஷிமூடில் இருக்கிறார். இதே உற்சாகத்துடன் தேர்தல் களத்திலும் நிர்வாகிகளை இறக்கி விட்டுள்ளார். அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க ஒரு டீமையே இறக்கி உள்ளார். இந்த குழுவினர் தொகுதிகளில் சென்று சாதக, பாதகங்களை அலசி வருகிறார்கள்.

கண்டிப்பாக வெற்றி பெறும் தொகுதிகள், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் என இரண்டு விதமாக பட்டியல் தயாரிக்கிறார்கள். கண்டிப்பாக வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் 4 வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து வருகிற 15-ந்தேதிக்குள் ஒப்படைக்கும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாராம். அ.தி.மு.க.வுக்குள் தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal