2024ம் ஆண்டுக்குள் பேராபத்து நிகழும்… மூன்று அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படும்’ என மடாதிபதி கூறியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே உள்ள ஹாரனஹள்ளி கிராமத்தில் கோடிமடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா மகாசுவாமி உள்ளார். இவர் அடிக்கடி எதிர்க்காலம் குறித்து பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அரசியல் மாற்றம், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்காலம், மழைப்பொழிவு உள்பட பல்வேறு விஷயங்களை அவர் கணித்து தெரிவித்து வருகிறார். இவரது கணிப்புகள் பல நேரங்களில் விவாதத்தை கிளப்பும் வகையில் இருக்கும். அந்த வகையில் தற்போது அவர் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

இதுதொடர்பாக மடாதிபதியாக ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா மகாசுவாமி கூறியதாவது: ‘‘நாட்டு மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெரிய பெரிய நகரங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். உயரமான கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இமயமலை அருகே உள்ள ஜோஷிமத் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. மேலும் 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் பேராபத்து ஏற்படலாம்.

இதனால் மக்கள் ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து ஆன்மிக சிந்தனையுடன் இருக்க வேண்டும். இதுதவிர 2024 உகாதி பண்டிகைக்கு முன்பு நாட்டில் உள்ள பெரிய பெரிய தலைவர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 3 பெரிய மனிதர்கள் ஆபத்தில் உள்ளனர். இதனால் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருந்தால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆபத்தில் உள்ளவர்கள் யார்? என்பதை நேரம் வரும்போது விரிவாக சொல்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அடுத்த பிரதமராக யார் வருவார்கள்? என பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர்,

‘‘இந்த கேள்விக்கு பதில் அளிப்பது சாதாரணமானது அல்ல. யார் அடுத்த பிரதமர் என்பதை இப்போதே சொல்லி விட முடியாது. அதுபற்றி இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது சாதாரண விடயமல்ல என்றார். அதை மட்டும் சொல்லிவிட முடியாது. அதுபற்றி ஆன்மிக சிந்தனையுடன் தியானம் செய்து தனியாக கணிக்க வேண்டும். அப்போது தான் அதுபற்றி தெரிவிக்க முடியும்’’என்றார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் இவர் கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அப்போது கர்நாடகாவில் வெள்ள அபாயம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். விஜயதசமி முதல் பொங்கல் பண்டிகைக்குள் இது நடக்காலம் என தெரிவித்து இருந்தார். தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்துக்கான அறிகுறியும் உள்ளது. மேலும் பல நாடுகள் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என இதற்கு முன்பு கூறியிருந்தார். அதன்படி உக்ரைன், இலங்கை, பாகிஸ்தான் உள்பட பல ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதார சிக்கலில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal