தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 685 காலியிடம் இருப்பதாகவும், இந்த வேலைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி மதியம் 1 மணி வரை கால அவகாசம் இருப்பதாகவும்www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிப்பவர்களுக்கு 1.1.23 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் பேசவும் படிக்கவும், எழுத தெரிந்திருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ., எடை 50 கிலோ இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரமம் மற்றும் குறைந்த பட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை மற்றும் ஓட்டுனர் உரிமம் 1.1.2023-க்கு முன்பு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கண் பார்வை திறன் குறைபாடு, காது கேட்கும் திறன் குறைபாடு, இரவு குருடு மற்றும் நிறக்குருடு குறைபாடு, வளைந்த கால்கள், முழங்கால் ஒட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடு உடையவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்றும் அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal