சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- தமிழகத்தில் பாத யாத்திரை என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பஸ் யாத்திரை நடத்தி கொண்டிருக்கிறார். நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி போல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட முடியாது.

ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது. அண்ணாமலையின் கனவு புலியை நினைத்து பூனை கோடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் இருக்கும். அண்ணாமலை பாத யாத்திரையை நிறைவு செய்யும்போது அவர் பதவியில் இருக்க மாட்டார். பதவியில் இருக்கிறாரோ இல்லையோ கர்நாடக மாநிலத்தில் அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய போது செய்த ஊழல்களுக்காக கைது செய்யப்படுவது உறுதி. இவ்வாறு இளங்கோவன் பரபரப்பாக பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal