டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அங்கு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருப்பதால் மலர் அலங்காரத்தின் முக்கிய அம்சமாக ஜி20 இலச்சினை இடம் பெறுகிறது.

செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவை காண்பதற்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சார்ந்த 1800 பேர் தங்களது வாழ்க்கை துணையுடன் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு உள்ளார்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து 44 பேர் குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. விவசாயத்துறை சுதாகர் (கோவூர் ஊராட்சி மன்ற தலைவர்), எஸ்.சங்கீதா திண்டுக்கல் அருகே ஆத்தூரை சேர்ந்த ஜம்ரூத் பேகம் மற்றும் ஈஷாக் கதர் துறை: காங்கேயம் காட்டுப்பாளையம் பழனிச்சாமி. திருப்பூர் செல்வி நீலாங்கரை மீனவ பிரதிநிதிகள் முனுசாமி-பத்மா உள்பட கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், பகுதியை சேர்ந்த 22 மீனவ பிரதிநிதிகள் சார்பில் பங்கேற்கிறார்கள்.

கல்வி சார்ந்த பிரதிநிதிகளாக தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த பாரத் ரத்னா, விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்த சுந்தரி ஆகியோர் பங்கேற்க செல்கின்றனர். பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் வழுதிகைமேடு பகுதியை சேர்ந்த கோபி மற்றும் படப்பை கரசங்கால் சசிகலா செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயநிதி, துரைவேலு உள்பட மொத்தம் 44 பேர் பங்கேற்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal