காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.