வேடசந்தூர் திமுக பிரமுகர் வீரா எஸ்டி சாமிநாதன் வீடு, அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருபப்வர் வீரா எஸ்டி சாமிநாதன். வீரா குழுமங்கள் என்ற பெயரில் பல நிறுவனங்களையும் கல்வி நிறுவனமும் நடத்தி வருகிறார் வீரா எஸ்டி சாமிநாதன்.

இந்நிலையில் வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள வீரா சாமிநாதன் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையால் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal