சென்னை: சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் சந்திப்பு. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை தினமும் கடந்து செல்கின்றது.

இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது. வடபழனி கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal