கோவையில் 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி உள்ளிட்ட 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், மாநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாநகர போலீசார் 2 ஆயிரம் பேர், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 1,500 பேர், அதிவிரைவுப்படையினர் 400 பேர், கமாண்டோ படையினர் 100 பேர் என மாநகரத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவையில், பாதுகாப்பு பணிகளை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் மேற்பார்வையிட்டார்.

இந்நிலையில், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், பார்த்திபன் நியமிக்கப்படுவதாக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal