தமிழக முதல்வர் விஜய்யிடம் நேரடியாக சிலர் வைக்கும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருவதுதான் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் விஜய், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய சம்பவம்தான் தலைமைச் செயலகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, புதிய வாகனங்கள் வழங்குவதாக உறுதியளித்தார்.

அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்வர் விஜய் இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார். ‘‘மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயணத்தை எளிதாக்கி, அவர்களின் வாழ்வில் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களும் உடனிருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal