திருப்பரங்குன்றம் தீபத்​தூண் விவகாரத்​தில் முதல் உத்​தரவு பிறப்​பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதர​வாக மதுரை முழு​வதும் திடீரென போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை நாளில் தீபம் ஏற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்​தாண்டு உத்​தர​விட்​டார். இவரது உத்​தரவுக்​குப் பிறகே, தீபத்​தூண் விவகாரம் சூடு பிடிக்​கத் தொடங்​கியது. மேல்​முறையீட்​டில் அவரது உத்​தரவு உறுதி செய்​யப்​பட்​டது. பின்​னர் தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​தது. உச்ச நீதி​மன்​றம் இந்​தாண்டு தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளது.

இந்த உத்​தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் சீராய்வு மனுவை தாக்​கல் செய்​துள்ளது. இத​னால் தீபத்​தூணில் இன்று மாலை கார்த்​திகை தீபம் ஏற்​றப்​படும் விவகாரத்​தில் தற்​போது வரை குழப்​பம் நீடித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் தீபத்​தூணில் தீபம் ஏற்​றலாம் என கடந்த ஆண்டு முதல் உத்​தரவு பிறப்​பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதர​வாக, மதுரை முழு​வதும் நேற்று திடீரென போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டிருந்​தன.

திருப்​பரங்​குன்​றம் வழக்​கறிஞர்​கள் என்ற பெயரில், நீதிப​தி​யின் புகைப்​படத்​துடன் ஒட்​டப்​பட்​டிருந்த போஸ்​டர்​களில், ‘திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றலாம் என்ற வரலாற்று சிறப்​புமிக்க தீர்ப்பு வழங்​கிய நீதி​யரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எங்​களின் மனமார்ந்த நன்றி எனக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. நேற்று முன்​தினம் திருப்​பரங்​குன்​றம் கோயிலுக்கு மனைவியுடன் சென்று நீதிபதி சாமி தரிசனம் செய்த நிலை​யில், இந்த போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டிருப்​பது பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

இந்​நிலை​யில், நீதிப​தி​யின் பெயருக்கு களங்​கம் உரு​வாக்​கும் வகை​யில் வழக்​கறிஞர்​கள் என்ற பெயரில் முகவரி இல்​லாமல் போஸ்​டர்​கள் ஒட்​டியுள்​ளனர். திருப்​பரங்​குன்​றம் வழக்​கறிஞர்​களிடம் விசா​ரித்​த​போது நாங்​கள் யாரும் போஸ்​டர்​கள் அச்​சடிக்​க​வில்லை எனத் தெரி​வித்​துள்​ளனர்.

உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலை​யில் 2025-ல் தீர்ப்​பளித்த நீதிப​திக்கு வாழ்த்து தெரி​வித்து தற்​போது போஸ்​டர் ஒட்​டியது ஏன்? எனக் கேள்வி எழுகிறது. எனவே முகவரி​யின்றி போஸ்​டர் ஒட்​டிய​வர்​கள் மீது நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என இந்து மக்​கள் கட்சி கோரிக்கை வைத்​துள்​ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal