‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரில் நெல்லையில் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்படுவதாகவும், இதற்கான லோகோ மற்றும் கொடி அறிமுக விழா நாளை காலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நிகழ்வு த்ரிஷாவின் அனுமதியுடன் நடைபெறுகிறதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் முதல்வராக விரும்புவதாக த்ரிஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய பின்னர், திரிஷாவின் பெயரும் அரசியல் விவாதங்களில் அடிபடத் தொடங்கியது. முதல்வர் விஜய் பதவியேற்பு விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரிஷா பங்கேற்றது கவனம் பெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார் பந்தய நிகழ்ச்சியில் விஜய்யும் திரிஷாவும் பங்கேற்றனர். அண்மையில் நவம்பர் 5-ந் தேதி சென்னையில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக பங்கேற்றதும் பேசுபொருளானது.

இந்த நிலையில் நெல்லையில், “இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை” இன்று தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா எப்படி அரசியலில் கோலோச்சினாரோ? அதே போல் விஜய்க்கு பிறகு திரிஷா அரசியலில் ஜொலிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal