‘‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை” என்ற பெயரில் நெல்லையில் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்படுவதாகவும், இதற்கான லோகோ மற்றும் கொடி அறிமுக விழா இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு த்ரிஷாவின் அனுமதியுடன் நடைபெறுகிறதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் முதல்வராக விரும்புவதாக த்ரிஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (நவம்பர் 23)-ந் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு ‘‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை” தொடங்கப்பட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் அறிவித்தார். அத்துடன் பேரவையின் லோகோவையும் அவர் வெளியிட்டார். அந்த லோகோவில், “பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!!” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
