கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பிய விவகாரத்தில் ஆளும் தரப்புதான் மௌனமாக இருக்கிறது, என்றால், காவல்துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று தொல்லை கொடுத்ததாகவும் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

அதனைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர், தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு அனுப்பிய முதல் கடிதத்தில், “இந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அழியாமல் பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும்; தவறான நடத்தையில் ஈடுபட்டவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் அவரைக் காப்பாற்றக் கூடாது” என வலியுறுத்தி, 7 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

தேசிய மகளிர் ஆணையம் வழங்கிய 7 நாட்கள் காலக்கெடு நிறைவடைந்த நிலையிலும், தமிழக காவல்துறை தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. தேசிய மகளிர் ஆணையம் வழங்கிய 7 நாட்கள் காலக்கெடு நிறைவடைந்த நிலையிலும், தமிழக காவல்துறை தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, விசாரணை எந்த நிலையில் உள்ளது என்ற விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபி-க்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான புகாரில் காலதாமதம் காட்டாமல் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீபத்தில் மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற பணியிட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆட்சியரின் கணவர் புகார் அளித்தும் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியது பெரும் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal