ராஜஸ்தானில் பாஜக ஆளும் கட்​சி​யாக​வும், அதன் முக்​கிய எதிர்​கட்​சி​யாகக் காங்​கிரஸும் உள்​ளன. இந்​நிலை​யில் பஞ்​சாயத்​துத் தேர்​தல் கடந்த வாரம் நடை​பெற்​றது. இதில், 37 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய மொத்​தம் உள்ள 419 பஞ்​சாயத்து சமிதி இடங்​களுக்​கான முடிவு​கள் நேற்று அறி​விக்​கப்​பட்​டன. இதில், காங்​கிரஸ் 275 இடங்​களைக் கைப்​பற்​றியுள்ள நிலை​யில், பாஜக 63 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளது. இது பாஜகவுக்​குப் பெரும் பின்​னடைவாக அமைந்​துள்​ளது.

ஜில்லா பரிஷத் மற்​றும் பஞ்​சாயத்து சமிதி முடிவு​களில், பாஜகவை விட காங்​கிரஸ் முன்​னிலை​யில் உள்​ளது. பல இடங்​களில், சிறிய கட்​சிகளும் சுயேச்சை வேட்​பாளர்​களும் பாஜக​வின் வெற்றி வாய்ப்​பைப் பாதிக்​கும் காரணி​யாக மாறியுள்​ளனர். மொத்​தம் உள்ள 37 ஜில்லா பரிஷத் இடங்​களில், காங்​கிரஸ் 23 இடங்​களைக் கைப்​பற்​றியுள்​ளது. அதே சமயம், பாஜக 5 இடங்​களில் வெற்றி பெற்று, மேலும் 6 இடங்​களில் முன்​னிலை​யில் உள்​ளது.

நாகூரில் ஆர்​எல்பி கட்சி வெற்றி பெற்​றுள்​ளது. பாலோத்​ராவில், காங்​கிரஸும் பாஜகவும் தலா 12 இடங்​களைப் பெற்​றுள்​ளன. இங்கு 7 இடங்​களைக் கொண்​டுள்ள ஆர்​எல்பி, கிங்​மேக்​க​ராகி உள்​ளது. துங்​கர்​பூரில், காங்​கிரஸும், பிஎஸ்பி கட்​சி​யும் தலா 14 இடங்​களைப் பெற்​றுள்​ளன. இங்கு 9 இடங்​களைக் கொண்​டுள்ள பாஜக, முடிவைத் தீர்​மானிக்​கும் சக்​தி​யாக உள்​ளது.

கைர்​தல்-திஜாராவில், காங்​கிரஸும் பாஜகவும் தலா 10 இடங்​களைப் பெற்​றுள்ள நிலை​யில், சுயேச்சை வேட்​பாளர்​கள் அதி​காரத்​தைத் தீர்​மானிக்​கும் முக்​கிய சக்​தி​யாக உள்​ளனர். ஆர்​எல்பி, பிஎஸ்பி மற்​றும் சிபிஎம் போன்ற கட்​சிகள் மொத்​தம் 64 இடங்​களைக் கைப்​பற்​றியுள்​ளன. இருப்​பினும், 17 பஞ்​சாயத்து சமி​தி​களில் எந்​தக் கட்​சிக்​கும் தெளிவான பெரும்​பான்மை கிடைக்​க​வில்லை.

ஜில்லா பரிஷத்​தில் மொத்​தம் 1,275 வார்​டுகள் உள்​ளன. இதில் காங்​கிரஸ் 794 இடங்​களை​யும், பாஜக 357 இடங்​களை​யும் கைப்​பற்​றியுள்​ளன. ஆர்​எல்பி 51, பிஎஸ்பி 43, சிபிஎம் 7 இடங்​களை​யும், சுயேட்சை வேட்​பாளர்​கள் 13 இடங்​களை​யும் வென்​றுள்​ளனர்.

மொத்​தம் உள்ள 7,543 பஞ்​சாயத்து சமிதி வார்​டுகளில், காங்​கிரஸ் 3,758 இடங்​களைக் கைப்​பற்றி மிகப்​பெரிய கட்​சி​யாக உரு​வெடுத்​துள்​ளது. பாஜக 2,213 இடங்​களைக் கைப்​பற்​றியது. மேலும், ஆர்​எல்பி 497, பிஎஸ்பி 278, சிபிஎம் 50 இடங்​களி​லும் வெற்றி பெற்​றன. சுயேச்சை வேட்​பாளர்​கள் 662 இடங்​களில் வெற்றி பெற்​றனர்.

இது​குறித்து காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லிகார்​ஜுனா கார்கே கூறும்​போது, “டபுள் இன்​ஜின் ஆட்​சிக்கு மக்​கள் பாடம் புகட்​டு​கிறார்​கள். தேர்​தல் முடிவு​களுக்​காக பொது​மக்​களுக்கு நன்றி” என்​றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal