‘தமிழக எழுச்சிக் கழகம்’ எனும் புதிய அரசியல் கட்சியை நடிகர் தனுஷ் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தனது மாமனாரால் கோட்டையை பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மருமகன் தனுஷ் கோட்டையை பிடித்தே தீருவேன் என்று அதிதீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட டெல்லிக்கு சென்றிருந்தார் தனுஷ். அங்கு சில முக்கிய அரசியல் கட்சியினரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து சென்னை வந்த அவர், திடீரென மகளிரணியினரை சந்தித்தார்.அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்ததுடன் தலா 20 கிராம் எடைக் கொண்ட வெள்ளி காமாட்சி விளக்குகளை பரிசாக கொடுத்திருந்தார். ஒரு பிரபல நகைக் கடையின் பெயருக்கு கீழ் ஏற்கெனவே தாமரை போன்று லோகோ இருந்து வரும் நிலையில் ஸ்பெஷலாக அனைத்து விளக்குகளின் அடிபாகத்திலும் தாமரை சின்னம் பதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் “தமிழக எழுச்சிக் கழகம்” என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்க போகிறார் என சொல்லப்படுகிறது. இதை பார்க்கும் போது அப்படியே விஜய் கட்சியின் பெயரை போல் இருக்கிறது.
விஜய் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம், தனுஷ் கட்சியின் பெயர் தமிழக எழுச்சிக் கழகம். விஜய் கட்சித் தொடங்கிய போது வெற்றிக்கு பக்கத்தில் ஒற்றெழுத்தான “க்” வரவில்லை என தமிழ் அறிஞர்கள் பலரும் சுட்டிக் காட்டியதை ஏற்ற விஜய், தனது கட்சியின் பெயரை திருத்தி வெளியிட்டார். அந்த வகையில் தனுஷ் தொடக்கத்திலேயே எழுச்சிக்கு பக்கத்தில் “க்” வைத்தே வெளியிடுவார் என்கிறார்கள். அது TVK, இது TEK. விஜய்யோடது தவெக , தனுஷோடது தஎக! எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருப்போம்.
