வருகிற அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் விஜய் கலந்து கொள்வதாக செய்திகள் வந்தன. இது தொடர்பாக ‘தமிழக அரசியல்’ இதழில் ‘அக்டோபர் 30ல் தேவர் குருபூஜைக்கு வரும் விஜய்! &பரபரக்கும் பசும்பொன்’ என செய்தி வெளியிட்டிருந்தாம். இந்த நிலையில்தான் முதல்வரின் பசும்பொன் பயணம் ரத்தாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது ஜெயந்தி விழா, 64 ஆவது குரு பூஜை வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பசும்பொன்னுக்கு வருகை தரவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஹெலிபேடும் தயாராகி வருகிறது.
அது போல் தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் உளவுத் துறை, போலீஸாரின் எச்சரிக்கையே தொடர்ந்து பசும்பொன் செல்லும் பயணத்தை முதல்வர் விஜய் ரத்து செய்துள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உளவுத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘பசும்பொன்னில் ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.
அங்கு முதல்வர் செல்லும் போது கூட்டம் அதிகமாகி சிறு அசம்பாவிதம் நடந்தாலும் எதிர்க்கட்சிகள் அதை பெரிதுப்படுத்தி அரசியல் செய்யக் கூடும். எனவே பசும்பொன் செல்வதை தவிர்க்குமாறு உயரதிகாரிகள் விஜய்யிடம் கூறியுள்ளனராம். அது போல் உளவுத் துறையும் அதே ஆலோசனையை வழங்கியுள்ளது. இதையேற்று பசும்பொன் பயணத்தை முதல்வர் தவிர்த்துள்ளார்’’ என்றனர்.
