‘மாற்றம் வேண்டும்’ என வாக்களித்த மக்கள் இன்றைக்கு தமிழகம் வளர்ச்சித் திட்டங்களில் பின்னோக்கி ‘முட்டுச்சந்தில்’ இருக்கிறது என கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்!
இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் ‘‘முட்டுச்சந்தில்’’ எனும் தலைப்பில் ஆளும் த.வெ.க. முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்.
‘‘கடமை என்ன என்பதை அறியாத அப்ரன்டிஸ் அமெச்சூர்கள் ஒரு பக்கமும்
முதலமைச்சராக நடக்காமல் முதலமைச்சராக நடிக்க மட்டுமே கால்ஷீட் கொடுத்து அலையும் சினிமாத்தனத்தில் “முதன்மை அமைச்சர்“ மறுபக்கமும்..
இது தான் தங்களுக்கான பொற்காலம் என ஆடித் தீர்க்கும் அதிகாரிகள் இன்னொரு பக்கமும் என மொத்தத் தமிழகமும் முட்டுச்சந்தில் விக்கித்து நிற்கிறது… சட்டம் ஒழுங்கு சர்வநாசம்…
சகல அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடும் உயர்வு…
இயற்கை சீற்றங்களை நோக்கி நகரும் நெருக்கடிக் காலத்தை எதிர் கொள்ள முறையான திட்டமின்மை..
மின்தடை ஒரு பக்கம் தாறுமாறான மின்கட்டணம் மறுபக்கம்…
திமுக ஆட்சிக்காலத்து நிறைவுற்ற திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டுவதை தவிர வேறு எதுவுமே நடக்காத முடக்க நிலையில் அரசு நிர்வாகம்…
குறுவை சம்பா சாகுபடி முற்றிலுமாக சீர்குலைவு…
கொடுத்த வாக்குறுதிகளை
கோமோவில் கிடத்தி வைத்து விட்டு
“கையை அசைத்தார்“
“காலை ஆட்டினார்“
“பல்லால் சிரித்தார்“
“பட்டு வேட்டியில் ஜொலித்தார்“ என்றெல்லாம்
அருவருப்பு பெய்டு நியூஸ் பிரேக்கிங்-களின் கிறுக்குத்தனங்கள்…
இப்படி துயரங்களில் தோரணமாக தொடரும் இந்ந ஆட்சிக்காக…
வாக்களித்தவர்கள் மட்டுமல்ல இந்த ஆட்சியை உருவாக்கிய ணிக்ஷிவி எந்திரஙகளுக்கு உயிர் இருந்தால் அவைகளுமே ஆளத் தெரியாத மக்குகளிடம் தமிழகத்தை ஒப்படைத்து விட்டோமோ என கண்ணீர் விட்டு கதறித் தான் அழும் …
இது தான் நிஜம்
இது தான் நிதர்சனம்…
இந்த பொம்மலாட்ட ஆட்சியின் கயிறு பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பாவிகளுக்கும்…
இந்த மொத்த மடத்தனங்களுக்கு காரணமான அந்த “காவிகளுக்கும்“ இது தெரியும் தானே…
