எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது, இதே போல் மழைவெள்ள பாதிப்பின்போது நள்ளிரவில் தனது சேப்பாக்கம் தொகுதியில் பாதிப்புகளை பார்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.

ஆனால், தற்போது சென்னை மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றார் உதயநிதி ஸ்டாலினின்.

உதயநிதி ஸ்டாலினின் துபாய் பயண விவரங்களும், அவரது விமான டிக்கெட் நகல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாகவும், வைரலாகவும் மாறியுள்ளன.

அக்டோபர் 18-ஆம் தேதியான நேற்று துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ள அவர், வரும் அக்டோபர் 21-ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புவது போன்ற முன்பதிவுத் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. மேலும், இந்தப் பயணத்தின்போது அவர் தனியாகச் செல்லவில்லை என்றும், விமானத்தில் அவருக்கு அடுத்த இருக்கையில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமர்ந்து பயணித்துள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல்கள் வெளியானதை அடுத்து, நெட்டிசன்களும் அரசியல் விமர்சகர்களும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருவதுடன், இது தொடர்பான விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

ஆகாஷ் பாஸ்கரன் மிகவும் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பாஸ்கரன், சேலத்தில் புகழ்பெற்ற ‘பிஆர்ஆர் ஸ்வர்ண மாளிகை’ நகைக்கடையின் உரிமையாளர் ஆவார். இவரது சகோதரியை அன்பில் மகேஷின் மைத்துனர் வாளாடி கார்த்திக் திருமணம் செய்திருக்கிறார்.

ஆகாஷ் பாஸ்கரனின் மனைவி தாரணி ஆவார். இவரது தந்தை சி.கே.ரங்கநாதன், ‘கவின் கேர்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

தாரணியின் தாயார் தேன்மொழி, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேத்தி ஆவார். அதாவது, கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள்தான் தேன்மொழி ஆவார்.

சி.கே.ரங்கநாதன் – தேன்மொழி தம்பதியினரின் மகன் மனு ரஞ்சித் ஆவார். இவர் பிரபல நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவைத் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக் துறையில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்குப் பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சார்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு விகாரத்தில் தொடர்ப்பு இருப்பதாக கூறி கடந்த 16.05.2025 அன்று அமலாக்கத் துறையினர் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள சூழலில், நேற்று (18.10.2026) உதயநிதி ஸ்டாலினும் ஆகாஷ் பாஸ்கரனும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து விமானத்தில் துபாய் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பயணம் தொடர்பான தகவல்கள் மற்றும் அதன் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாத நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal