இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்களை புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் ஆளும்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே வேட்பாளர்களை அறிவித்துள்ள முக்கிய கட்சிகள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு குழு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இடைத்தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவில் அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் இடம் பெறவில்லை.

வடமாவட்டத்தில் அதிமுகவில் செல்வாக்கோடு திகழும் சி.வி.சண்முகத்தை களமிறக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல். அதேபோன்று கொங்கு பகுதியான தாராபுரத்திலும் எஸ்பி வேலுமணி களப்பணியாற்றினால் கூடுதல் பலம் எனக் கருதுவதாகவும் தெரிகிறது.

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசியபோது, ‘‘சார், எடப்பாடியைப் பொறுத்தளவில் எஸ்.வி.வேலுமணி, சி.வி.சண்முகம் இரண்டு பேரும் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள்… சட்டமன்றத்தில் த.வெ.க.விற்கு ஆதரவாக வாக்களித்தவர்களை எப்படி தேர்தல் குழுவில் நியமிக்க முடியும். எடப்பாடி பழனிசாமி கரெக்டான முடிவைத்தான் எடுத்திருக்கிறார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal