தமிழக அரசியல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி ‘குட்டு’ வைத்து எழுதுபவர்தான் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். சமீபதில் ‘புகழிழந்து போகும் புனித ஜார்ஜ கோட்டை’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் பதிவு செய்திருந்தது மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில்தான் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,
‘‘தலைவிதி’’ எனும் தலைப்பில்…

‘‘ “தல”எழுதிய
விதி
அதனால்
அதற்கு
தலைவிதி
எனப் பெயர்..

அது
திருத்தங்களே
இல்லாத
ஆண்டவனின்
அரசியல்
அமைப்புச்
சட்டம்..

அது கருணை மனுக்களுக்கு
இடமில்லாத
கட்டாயப் பாடம்..

போலீசாக
ஆசைப்
பட்டவனை
திருடனாக்கும்

திருடனாக
திட்டமிட்டவனை
தலைவனாக்கும்..

ஆயுள்
முழுவதும்
தேர்வு உண்டு

அங்கே…

கேள்வியை
ஒளித்து
வைத்துக் கொண்டே

பதில் எழுதச்
சொல்கிற
பைத்திய
காரத்தனமும்
இருக்கும்..

வெற்றுப்
பேப்பரை
தந்தவனைக்
கூட

வெற்றி
பெற்றவனாக
அறிவிக்கும்
ஆச்சயர்யமும்
இருக்கும்..

கூடவே

மெத்தப்
படித்தவனுக்கு
முட்டாள் என
பட்டம் கட்டும்
பரிதாபமும்
நடக்கும்..

என்ன செய்வது ..

பாடத் திட்டத்தை
எழுதியவனே
பிறை சூடிய
பித்தன்
என்றால்

அவன் வகுத்த
விதிகளும்
அவன் நடத்தும்
தேர்வும்
அப்டித்தானே
இருக்கும்!

என்ன நாஞ்
சொல்றது..’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal