‘கன்னிப் பேச்சு பேசும் உறுப்பினர்கள் கண்ணியமாக பேசவேண்டும்’ என சொந்தக் கட்சி உறுப்பினர்களுக்கே சபாநாயகர் குட்டு வைக்கும் அவலநிலை தமிழக சட்டப் பேரவையில் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில்தான், ‘‘புகழிழந்து போகிறது புனித ஜார்ஜ் கோட்டை..!’’ எனும் தலைப்பில் கவிஞரும், எழுத்தாளரும், தி.மு.க. கொள்கை பரப்புத் துணைத் தலைவருமான மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் ஆவேசமாக தனது கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில்,
‘‘சபை உறுப்பினர்கள்
பேசிய
கருத்துக்களினும்
சபாநாயகர்
நீக்கி வீசிய
கழிவுகளே
அதிகம் என்றிருக்க
விவாதங்களை விட
விதிகளை மீறிய
விதண்டா
வாதங்களே
மிகுதியாகிட…

மரபுகளை
மதிக்காத
மனிதப்
பிழைகளும்
‘மரிய வில்லனின்’
கணிதப்
பிழைகளும்
கன்னித் தமிழை
காயப்படுத்தி
மதத்தைக் கொண்டு
அதனை
மறைக்க முனைந்த
மலிவுப்
பிழைகளும் என
நேரலை
என்பதே
நேர் கொலை
என்பதாகி
விசிலடித்தான்
குஞ்சுகளால்
சரித்திரம் மிக்க
சட்டசபை
சப்த சபையாகி
புகழிழந்து
போகிறது
புனித ஜார்ஜ்
கோட்டையே..!
என்ன நாஞ் சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்!
