முதல்வர் விஜயிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை மனைவி சங்கீதா இன்று (ஆகஸ்ட் 7) அதை வாபஸ் பெற்றார். இதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

முதல்வர் விஜய் 1999ல் சங்கீதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். விஜய் முதல்வர் ஆவதற்கு முன்பு தீவிர அரசியலில் பிரசாரம் செய்து வந்தார். அந்த நேரத்தில் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தங்களது பிரிவு பின்னணியில் ஒரு நடிகை இருந்ததாகவும் அப்போது குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜூன் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வழக்கறிஞர்கள் விஜய், சங்கீதா இருவரும் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக கோரிக்கை விடுத்தனர். வீடியோ கான்பரன்சிங் விசாரணை இல்லை என கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஆகஸ்ட் 7ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 07) மீண்டும் விசாரணைக்கு வந்தது. சட்டசபை நடப்பதால் விவாகரத்து வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க முதல்வர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இன்றே விசாரிக்க வேண்டும் என வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான சங்கீதா வைத்த கோரிக்கையை ஏற்று, பிற்பகலுக்கு விசாரணையை ஒத்திவைத்து செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பிறகு மதியம் 1 மணிக்கு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது. பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று எடுக்கப்பட்டது. அப்போது சங்கீதா தரப்பில் தன்னுடைய கணவரும், தமிழக முதல்வருமான விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார். இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் அறிவித்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal