கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, தமிழகத்துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மே மாத இறுதியில் வழக்கமான அளவுக்கு தென்மேற்குப் பருவமழை பெய்யவில்லை. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளுக்கும் போதிய நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டன.
இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தமிழக அரசு கடந்த 28-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முறையிட்டதை அடுத்து, 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடிநீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. இதை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான திரையரங்குகளை முற்றுகையிட்டனர். பேனர்களை கிழித்ததோடு, கர்நாடகா முழுவதும் ‘ஜனநாயகன்’ திரையிடலை நிறுத்தினர்.
இதன் காரணமாக, பதற்றமான சூழல் நிலவியதால், முதல்வர் விஜய்யின் பெங்களூரு பயணத்தை தள்ளிவைக்குமாறு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்தார். காவிரி பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் முற்றிவந்த நிலையில், கடந்த 31-ம் தேதி மாலை காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது.

காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரியில் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டியது. குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, மடிகேரி, சோமவார்பேட்டை, வீராஜ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கொட்டிய மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விடிய விடிய பெய்த மழை வரை விடாமல் கொட்டித் தீர்த்தது.
இதற்கிடையே, காவிரியின் முக்கிய துணை நதியான கபினி உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நேற்று முன்தினம் 6,000 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் 16,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதேபோல, குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்ததால், 2 அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயரத் தொடங்கின.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் கடந்த 1ம்தேதி பிற்பகல் 2 மணிக்கு 2,280 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் மாலை 5 மணிக்கு 10,000 கனஅடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 15,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
இதற்கிடையே, காவிரியின் முக்கிய துணை நதியான கபினி உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நேற்று முன்தினம் 6,000 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் 16,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதேபோல, குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்ததால், 2 அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயரத் தொடங்கின.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு 2,280 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் மாலை 5 மணிக்கு 10,000 கனஅடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 15,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
கபினி அணையில் இருந்து திடீரென அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபினி, ஹாரங்கி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. 2 அணைகளும் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், ‘‘இரு மாநிலங்கள் இடையே சுமுகமான சூழல் நிலவ வேண்டும் என காவிரித் தாயிடம் வேண்டினேன். நல்ல முறையில் மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த நீரை தேக்கி வைத்தால் அணைகளுக்கு ஆபத்தாகிவிடும்.
எனவே, நீரை தேக்கி வைக்க முடியாது. தமிழகத்துக்கு நீரை திறக்காமல் தடுத்தால் நம் அனைவரையும் அடித்துச் சென்றுவிடும். விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தண்ணீரை தடுப்பதாக சொல்லி ஆற்றில் இறங்கிப் போராட வேண்டாம். அவர்களது உயிர்கள் விலை மதிப்பற்றவை.
13-ம் தேதி அறிவித்த முழு அடைப்பு போராட்டத்தையும் நடத்த வேண்டாம். இயற்கை அனைவருக்கும் சொந்தமானது. நீரை தரக்கூடாது என சொல்லக் கூடாது. இரு மாநிலங்களும் பயனடைய வேண்டும் என்பதே என் விருப்பம்’’ இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, காவிரி நீர் பங்கீடு குறித்து விவாதிக்க, கர்நாடக முதல்வர் சிவகுமார் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. ஆக மொத்தத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் செய்துகொண்டிருந்த ‘காவிரி நீர்’ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
