தமிழக முதல்வருடன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தைப் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டினார் நடிகை திரிஷா! இந்த நிலையில்தான் திரிஷாவின் பதிவு ஒன்றுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
சமீப காலமாக திரிஷா படங்களில் நடித்து பிரபலமாக இருப்பதை விடவும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். அதுபோல அவருடைய சோசியல் மீடியா போஸ்ட் பார்ப்பதற்காகவும் அதிகமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்று என்ன தான் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் சிலர் இருக்கிறார்கள். அடிக்கடி தன்னுடைய வாழ்க்கைக்கு தகுந்த மாதிரியான வீடியோக்கள் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து வருவார்.
சில நேரங்களில் தன்னுடைய நாய்களின் வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் இப்போது வெளியிட்ட ஒரு பதிவில் வயது அதிகரிப்பு மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி குறித்து பிரபல சோசியல் மீடியா பிரபலமான ஓபரா வின்ஃபிரே பேசிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல திரிஷா பகிர்ந்து இருக்கிறார். அதில் ஓப்ரா வின்ஃபிரேவிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்க 30 வயதுக்கு திரும்புவீங்களா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் 30 வயதுக்கு நான் திரும்ப விரும்பவில்லை. மாறாக 44 வயதுக்கு திரும்ப விரும்புகிறேன், காரணம் உண்மையில் வாழ்க்கை 44 வயதில் தான் தொடங்குகிறது என்கிறார்.
அதோடு பொதுவாக 44 வயதில் தான் நீங்கள் உங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணம் குறையும். எனது 44வது வயதில் தான் நான் எனது நோக்கத்தை தெளிவாக உணர்ந்தேன். பிறருக்காக வேலை செய்வதை விடுத்து எனக்காகவும் என் இலக்குக்காகவும் வாழ ஆரம்பித்தேன் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த வீடியோவை தான் திரிஷா தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு “ஆமென்” என்ற ஒரு கமெண்ட் மட்டும் கூடுதலாக சேர்த்து பதிவிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் திரிஷாவுக்கு என்ன ஆச்சு? எதனால் இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு சிலர் திரிஷா எப்போதும் பகிர்ந்து வருவது போல இதுவும் ஒரு பாசிட்டிவான மோட்டிவேஷன் தான் என்று சொல்ல, இன்னும் ஒரு சிலர் அதற்கு வாய்ப்பு இருந்த மாதிரி தெரியவில்லை என்று கூறுகிறார்கள். ஏற்கனவே திரிஷாவுக்கும் அவருடைய நண்பர் விஜய்க்கும் ஏதோ கருத்து வேறுபாடு என்று சொல்கிறார்களே அதற்காக கூட இதுபோல போஸ்ட் போட்டு இருக்கிறாரா? என்றும் கமெண்ட் கொடுக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் நெருப்பில்லாமல் புகையாது..!
