காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடனான நட்பை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது மு.க.ஸ்டாலின்தான். அதே போல் இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவராக பங்கெடுத்ததும் தி.மு.க.தான். அப்படிப்பட்ட தி.மு.க.வை இரண்டு அமைச்சர்கள் பதவிக்காக உதறினார் ராகுல்காந்தி. இன்றைக்கு காக்ரோச் ஜனதா கட்சியுடன் கோர்க்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள்தான் சோனியா காந்தியை கவலையில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
இது பற்றி டெல்லி வட்டாரத்தில் பேசினோம், ‘‘ தி.மு.க.வுடனான உறவை முறித்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்திமீது கடும் கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார். மாநிலத்தில் கிடைத்த 2 அமைச்சர் பதவிகள் என்ற சிறிய லாபத்திற்காக, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் தூணாக விளங்கிய திமுகவின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது.
இதனால் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் நம்மை நம்புவது இல்லை. என்பதே சோனியாவின் கவலைக்கு முக்கியக் காரணம். திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் குடும்பத்திற்கு இருந்த நீண்டகால தனிப்பட்ட நட்பை முறித்துக்கொண்டு, தவெகா பக்கம் சென்றது டெல்லி மேலிடத்தின் அவசரக்கோல முடிவு என அக்கட்சியின் மூத்த தலைவர்களே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
ராகுல் காந்தியின் இந்தத் தவறான கணக்கீடு, இப்போது அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. நீட் விவகாரத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள ‘காக்ரோச் ஜனதா கட்சி’ உடன் திமுக கைகோர்த்து, தேசிய அளவில் ஒரு மாபெரும் 3வது அணியைக் கட்டமைக்கத் தீவிரமாக இறங்கியுள்ளது.
சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் திமுக ஆகிய மாநிலக் கட்சிகள் அனைத்தும் சியிறி தலைமையிலான இந்த புதிய கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. மிக முக்கியமாக, இந்த 3வது அணியில் காங்கிரஸை முற்றிலும் புறக்கணிக்க அனைத்து மாநிலக் கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.
தமிழகத்தில் கிடைத்த தற்காலிக அதிகாரப் பசிக்காக, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக உருவெடுக்கவிருந்த மாபெரும் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இப்போது தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் (CJP) -காக்ரோச் ஜனதா பார்ட்டி – திமுக கூட்டணி, இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று களமிறங்கும்போது, மறுபுறம் தவெக -& காங்கிரஸ் கூட்டணி பெரும் சவாலைச் சந்திக்கும்.
தவெகவுடன் இணைந்து பெற்ற 2 அமைச்சர் பதவிகள், தேசிய அளவில் காங்கிரஸின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்கிறார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள். வெறும் 2 அமைச்சர் பதவி அந்த கட்சியின் மாநில எதிர்காலம், தேசிய எதிர்காலம் இரண்டையும் உடைத்து நொறுக்கிவிட்டு என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார் சோனியாகாந்தி’’ என்றனர்.
