மீபத்தில்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து கட்சியினர் ஆய்வுக்கு செல்லக்கூடாது என புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார்.

தவிர, அரசு பள்ளியில் பெண் அமைச்சர் ஆய்வு(!?) நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர்களுமே தேவையில்லாமல் ஆய்வுக்கு செல்லவேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்தான், புதுக்​கோட்​டை​யில் அரசு முகாமில் அமைச்​சரின் சகோ​தரர் ஆய்வு செய்த விவ​காரம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.இதுதொடர்​பாக நிர்​வாகி​கள் எடுத்து வெளி​யிட்ட ‘ரீல்ஸ்’ சமூகவலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

புதுக்​கோட்​டை​யில் மாவட்ட நிர்​வாகத்​தின் சார்​பில் தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் அவர்​களது குடும்​பத்​தினருக்கு அரசு சேவை​கள் மற்​றும் நலத்​திட்​டங்​களைப் பெறு​வதற்​கான பதிவு முகாம் தனி​யார் திருமண மண்​டபத்​தில் கடந்த 22-ம் தேதி நடை​பெற்​றது.

இந்த முகாமை ஆட்​சி​யர் எம்​.அருணா ஆய்வு செய்​து ​விட்டு சென்ற பின், அங்கு தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸின் மூத்த சகோ​தரர் முகமது இப்​ராஹிம், மாநக​ராட்சி கவுன்​சிலர் சேட் (எ) அப்​துல் ரகு​மான் மற்​றும் கட்​சி​யினர் அங்கு வந்​தனர். அவர்களை மாநக​ராட்சி ஆணை​யர் காந்​தி​ராஜ் அழைத்​துச் சென்று முகாம் குறித்து விளக்​கி​னார்​. அப்​போது, ஆவணங்​களை எடுத்​துப் பார்த்து சில ஆலோ​சனை​களை இப்ராஹிம் கூறி​னார்.

ஆய்​வுப் பணி முடிந்​ததும் புறப்​பட்ட முகமது இப்​ராஹிமை மண்​டபத்​தின் வாசல் வரை சென்று ஆணை​யர் வழியனுப்பி வைத்​தார். இது தொடர்​பான நிர்வாகிகள் எடுத்த ரீல்ஸ் தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. அரசு பணி​களில் கட்சி நிர்​வாகி​கள் ஆய்​வுக்கு செல்​லக் கூடாது. மீறி​னால் நடவடிக்கை எடுக்​கப்​படும் என கட்​சித் தலைமை அறி​வுறுத்​தி​யுள்ள நிலை​யில், புதுக்​கோட்​டை​யில்​ நடை​பெற்​ற இச்​சம்​பவம்​ சர்​ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal