நீட் வினாத்தாள் முறைகேடுகளைக் கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டியும் கரப்பான் பூச்சி கட்சியினர் சார்பாக டெல்லியில் ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சிஜேபி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி நள்ளிரவில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை நள்ளிரவு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இது ஒரு சாதாரண பிரச்சனை அல்ல, நமது இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்றும் பேசி இருந்தார்.

‘‘விரைவு நீதிமன்றம் அமைப்பதற்காக நான் துறைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினேன். நாளை, அமைச்சரவையில் சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்கப்படும். அமைச்சரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு, அதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை முதல் அந்த மசோதாவை கூடிய விரைவில் நிறைவேற்ற முயற்சிப்போம்’’ என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் ஏராளமான பார்வைகளைப் பெற்றது. 24 மணி நேரத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்கு அதிகபட்ச பார்வைகளைப் பெற்றதன் மூலம் மோடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுவரை அந்த ரீல் வீடியோ 303 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனை ஒரு நாளில் 300 மில்லியன் பார்வைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏராளமானோர் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை புதிதாக ஃபாலோ செய்துள்ளனர். ஒரே நாளில் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராமை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக ஃபாலோ செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நண்பர்களே, நன்றி. நேற்று இரவு உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது காணொளிக்கு நீங்கள் அளித்த வரவேற்பும், உங்களின் நேர்மறையான கருத்துகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தன. எனது வீடியோவை பார்த்து, ஆழமான கருத்துக்களைத் தெரிவித்த இளைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal