நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது பெயரும் என் சகோதரர் அசோக்குமார் பெயரும் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இல்லாத போது நாங்கள் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் எனது பெயரும் எனது சகோதரர் அசோக்குமார் பெயரும் இல்லாத போது நாங்கள் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும்?

நான் இந்த வழக்கில் ஆஜராகும்பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக் கூடாது. 35 clause (3) BNS என்ற நோட்டீஸ் வழங்க வேண்டும். நான் மக்கள் பிரதிநிதி மட்டுமில்லை, தொழில் நிறுவவனங்களை நடத்தி வரும் தொழிலதிபரும் கூட! என செந்தில் பாலாஜி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal