சுவிட்சர்லாந்து​, இந்தியா இடையே கடந்த 2018-ல் முக்​கிய ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி சுவிட்சர்லாந்து வங்கி​களில் கணக்கு வைத்​திருக்​கும் இந்​தி​யர்​களின் நிதி விவரம் மத்​திய அரசுக்கு ஆண்​டு​தோறும் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இதன் ​படி 2025-ம் ஆண்​டுக்​கான விவரம் மத்​திய அரசிடம் நேற்று சமர்ப்​பிக்​கப்​பட்​டது. இதன்​படி சுவிட்​சர்​லாந்து வங்​கி​களில் இந்தியர்கள் முதலீடு செய்​திருக்​கும் தொகை 8 சதவீதம் குறைந்து உள்ளது. தற்​போதைய சூழலில் அந்த நாட்டு வங்கிகளில் இந்​தி​யர்​கள் தரப்​பில் ரூ.36,793 கோடி டெபாசிட் செய்யப்​பட்டு உள்​ளது.

சுவிட்​சர்​லாந்து வங்​கி​களில் அதிக தொகையை முதலீடு செய்​திருக்​கும் நாடு​களின் பட்​டியலில் பிரிட்​டன் முதலிடத்​தில் உள்​ளது. அமெரிக்கா 2-ம் இடத்​தி​லும், பிரான்ஸ் 3-ம் இடத்​தி​லும் உள்​ளன. மேற்​கிந்​திய தீவு​கள், ஜெர்​மனி, ஹாங்​காங், நெதர்லாந்து, ஐக்கிய அரசு அமீரகம் சிங்​கப்​பூர் உள்​ளிட்ட நாடு​கள் அடுத்​தடுத்த இடங்களில் உள்​ளன. இந்​தியா தற்​போது 46-வது இடத்​தில்​ உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal