முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேரில் செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பின்னர் பெரம்பூர் தொகுதி தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், தற்போது தன்னை வெற்றிபெறச் செய்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு தொகுதிக்கு அவர் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி மக்களையும், கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதியின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்து வருகின்றனர்.
