‘மாற்றம் வேண்டும்’ என்ற எண்ணத்தில் ஓட்டுப் போட்ட மக்கள் இப்போது ஏமாற்றத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருடைய செயல்பாடுகள் அறுவருக்கத்தக்க வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்த நிலையில்தான் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தல் ‘‘மாற்றம்’’ எனும் தலைப்பில்,
‘‘ வேட்டியும்
வெள்ளுடைச்
சட்டையும்
வெள்ளைக்
காரன்
கோட்டிடம்
வீழ்ந்தது…
மூவாப் புகழ்
கொண்ட
முத்தமிழோ
மூன்றாம்
இடத்திற்கு
சரிந்தது…
ரகசியக்
காக்கும்
அரசவைக் கூடமோ
ரீல்சுக்கும்
செல்ஃபிக்கும்
படப்பிடிப்புத்
தளமானது…
இது தொடக்கம்
இன்னும்
இன்னும்
எவ்வளவோ
இருக்கு….
என்னநாஞ்
சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.
கடந்த முறை பதவியேற்ற போது தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டபோது, ‘இனி இதுபோன்று நடக்காது’ என்றார்கள். ஆனால், இன்றைக்கும் அதே நிலைமை தொடர்ந்திருப்பதுதான் கவலை அளிக்கிறது.
